search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
    X

    திருப்பூர் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

    திருப்பூர் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் ஐஐ சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் 114 கி.மீ தொலைவில் கோவை- கரூர் -67-ல் மேற்கொள்ளப்படவுள்ள புதிய சாலை சீரமைக்கும் பணியினையும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய இதர பணிகள் குறித்தும் , திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் -209-ல் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் ஐஐ சார்பில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் - திருப்பூர் -37 ல் 70.20 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்தும் இப்பணிகளுக்காக நிலம் எடுப்பு தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படை தேவையான சாலை மேம்பாட்டு பணியினை துரிதமாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திண்டுக்கல் மாவட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சேலம் மாவட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews

    Next Story
    ×