பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரை பஞ்சாயத்துக்குட்பட்டது இந்திரா நகர், கலை நகர். இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 6 மாதமாக இந்த பகுதியில் குடிநீ விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அப்பகுதியில் உள்ள மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது வறட்சி நிலவுவதால் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்கக்கோரி இந்திரா நகர், கலைநகர் மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் நேற்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.