தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் போராட்டம் 59-வது நாளாக இன்று நீடிக்கிறது.
மேலும் பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராம மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம் கிராமமக்கள் சில்வர்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தபால் தந்தி காலனி, முருகேசன் காலனி, 3-வது மைல், மாதவன் நகர், சிலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பகுதி மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மொத்தம் 12 இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்காக இறக்குமதி செய்து கொண்டுவரப்பட்ட தாமிரதாது மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் 8 லாரிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று இரவு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனை அறிந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, பிரபு உள்ளிட்டோர் சிப்காட் சாலை பகுதியில் 3 லாரிகளை மறித்தனர். ஆலை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாமிர உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வது குறித்து அதனை கொண்டு சென்றவர்களிடம் கேட்டனர்.
ஆனால் அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இதையடுத்து அந்த லாரிகளை போராட்ட குழுவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை இயக்க அனுமதி அளிக்காத நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலப்பொருட்களை கொண்டு சென்று அத்துமீறலில் ஈடுபடுவதாக தெரிவித்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து தாமிர தாது மணல் ஏற்றி சென்ற 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அந்த நிறுவனத்தை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்குழுவினர் முற்றுகையிட இன்று மதியம் திரண்டு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்பு போராட்டக்குழுவினர் சிறிதுநேரம் கோஷம் எழுப்பி விட்டு அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், நகர செயலாளர் ஞானசேகரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது சிலர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நல்லகண்ணு உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews