பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
பேரையூர்:
தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆறுகளில் முறையற்று திருடப்படும் மணல்களால் நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடந்து வருகிறது.
காவிரி படுகை மாவட்டங்களான கரூர், திருச்சியில் இருந்து மதுரை வழியாக கேரளாவுக்கு லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் 4 வழிச்சாலையில் நேற்று வட்டாட்சியர் நாகரத்தினம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். திருச்சியில் இருந்து வந்த 7 லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த லாரிகளில் எவ்வித ஆவணங்களும் இன்றி கேரளாவுக்கு மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து 7 லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து டிரைவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்று கேரளாவுக்கு மணல் கடத்தி வந்த 20-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.