சென்னை:
இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் 2025-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாபா என்.கல்யாணி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதற்கு முன்பு நடத்தப்பட்ட ராணுவ கண்காட்சிகளில் வெளிநாடுகளில் உள்ள ராணுவ உற்பத்தியாளர்கள் தங்கள் நாடுகளில் தயாரித்த பொருட்களை காட்சிப்படுத்துவார்கள். அதனை நம் நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை வாங்கும் நிலை இருந்தது.
ஆனால் மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக்கிங் இந்தியா) திட்டத்தின் கீழ் ராணுவத்துறைக்கு தேவையான அனைத்து தளவாட பொருட்களையும் நம் நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இறங்கி உள்ளார்.
ராணுவ தளவாட துறையில் 2016-ம் ஆண்டு கொள்முதல் கொள்கையும், இந்த ஆண்டு உற்பத்தி கொள்கையும் வகுக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தற்போது ராணுவ தளவாடங்களை பொறுத்தவரையில் 300 மில்லியன் டாலர் அதாவது ரூ.1,949.67 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சி மூலம் ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் 2025-ம் ஆண்டு ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.
இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதில் நிறைவான உற்பத்தியை எட்ட போதுமான தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேச மாநிலம், கான்பூரிலும் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களை சோதனை செய்வதற்கான நிறுவனம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட உள்ளது. வரும் காலத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களிலும் இதுபோன்ற நிறுவனங்கள் வர வாய்ப்பு உள்ளது. இதற்கான நடவடிக்கையில் மத்திய ராணுவத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் 49 சதவீதம் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 100 சதவீதம் வெளிநாட்டு முதலீடு வருவதால் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதுடன், ஏற்றுமதியும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு தலைமை இயக்குனர் சுப்ரதா சஹா உள்ளிட்டோர் இருந்தனர். #tamilnews