search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் 3 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
    X

    குமரியில் 3 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்

    கன்னியாகுமரியில் நாளை 3 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. இதில், 900 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்,
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 240 பள்ளிகளைச் சேர்ந்த 11206 மாணவர்களும், 13344 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். 79 மையங்களில் தேர்வு நடந்தது. தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளது.

    நாகர்கோவில், தக்கலை, குழித்துறை கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் வைக்கப்பட்டு உள்ள மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது. நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் நாகர்கோவில் ஜோசப் காண்வென்ட் பள்ளியில் வைத்து திருத்தப்படுகிறது.

    தக்கலை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் படந்தாலுமூடு புனித திருஇருதய மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து திருத்தப்படுகிறது.

    விடைத்தாள் திருத்தும் பணியல் 900 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். நாளை காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முதன்மை கல்வி அதிகாரி பாலா மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    விடைத்தாள் திருத்தும் பணியை வருகிற 25-ந் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×