search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே குளத்தில் மண் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
    X

    பழனி அருகே குளத்தில் மண் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

    பழனி அருகே குளத்தில் மண் கடத்திய 5 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

    பழனி:

    பழனி அருகே பொன்னிமலைக்கரடு பகுதியில் உள்ள அய்யங்குளத்தில் இருந்து அனுமதி இன்றி லாரிகள் மூலம் சிலர் மண் அள்ளிச்செல்வதாக சப்-கலெக்டர் அருண்ராஜுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சப்-கலெக்டர் அருண்ராஜ், தாசில்தார் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆயக்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போடு அந்த வழியாக மண் ஏற்றி வந்த 5 லாரிகளை நிறுத்தி அதை ஓட்டி வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என சோதனையிட்டனர்.

    அப்போது ஆவணங்கள் இன்றி அவர்கள் மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

    மேலும் லாரிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×