search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் 11-ந்தேதி தொடங்கும் ராணுவ கண்காட்சிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
    X

    மாமல்லபுரத்தில் 11-ந்தேதி தொடங்கும் ராணுவ கண்காட்சிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

    மாமல்லபுரத்தை அடுத்த வருகிற 11-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் பிரமாண்டமான ராணுவ தளவாட கண்காட்சிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் பிரமாண்டமான ராணுவ தளவாட கண்காட்சி நடை பெற உள்ளது.

    இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கண் காட்சிக்காக சுமார் 280 ஏக்கர் நிலத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு லாரிகளில் வந்த வண்ணம் உள்ளன.

    கண்காட்சி தொடங்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அரங்கங்களின் உட்பகுதி, தளவாடங்களை இயக்கும் பகுதி, ராணுவ வீரர்களின் சாகச பகுதி அனைத்தும் ராணுவ பாதுகாப்பில் உள்ளது.

    வளாக வெளிப் பகுதி, நுழைவு வாயில், மற்றும் தொலைதூர கண்காணிப்பு பகுதிகள் அனைத்தும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

    வளாகத்தின் வெளிப் பகுதி வேலிகள், போக்கு வரத்து சாலைகள், வெளியே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் இவைகளை பாதுகாக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த 3 அடுக்கு பாதுகாப்பு நேற்றில் இருந்து அமலுக்கு வந்தது. கண்காட்சி வளாகம் முழுவதையும் கண்காணிக்க 50 அடி உயரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட உயர் கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்தபடி பைனாகுலர், வயர்லஸ், கேமரா பொருத்திய நவீன துப்பாக்கிகளுடன் வீரர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவிடந்தை வரை வாகனங்கள் வேகமாக செல்லாமல் இருக்க 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 100மீட்டர் தூரத்துக்கு ஒரு 3 அடுக்கு வேகத்தடை போடப்பட்டுள்ளது.

    இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, ராணுவ கண்காட்சி பகுதியை பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவோ அனுமதி கிடையாது. அந்த பகுதி முழுவதும் 144தடை உத்தரவு போன்று காட்சி அளிக்கிறது.

    கண்காட்சிக்கு வரும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய ரிசார்ட்களில் ரூம்கள் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கும் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    ஓட்டல்களில் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு நவீன ரேடார் வசதியுடன் கண்காட்சி வளாகம் உள்ளிருந்தே பாதுகாப்பை ராணுவத்தினர் கண் காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×