search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    வன்கொடுமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    வன்கொடுமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பு இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், முன்னவன், பொதினிவளவன், செல்வநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், திராவிடர் கழகம் வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், கீதநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட அட்டவணை 9-வது பிரிவை இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    புதுவை அரசு அமைச்சரவையை கூட்டி தீர்ப்பை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு தீர்ப்பை தடுத்து நிறுத்த மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×