search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து- தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து- தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    திருவெண்காடு அருகே கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இதனிடையே மேற்கண்ட கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றால் பெருந்தோட்டம் பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முருகுபாண்டியன் அறிவித்தார்.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் நேற்று பெருந்தோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ரவி, விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முத்தமிழ் வரவேற்றார். இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.  #tamilnews
    Next Story
    ×