search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உண்ணாவிரதம்
    X

    பெரம்பலூரில் நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உண்ணாவிரதம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் அதனை செயல் படுத்தாத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

    பெரம்பலூர், ஏப். 2-

    காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் அதனை செயல் படுத்தாத மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கின்றது.

    அதில் தவறாது அனைவ ரும் கலந்து கொள்ள வேண் டும் என்று பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பெரம் பலூரில் நாளை 3-ந்தேதி உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்படும் என அ.தி. மு.க. சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், பொதுமக்கள், விவசாயிகள் தமி ழகம் முழுவதும் கொதிப் பலையில் உள்ளனர். இத னால் மத்திய அரசை கண் டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என அ.தி.மு.க. அரசு முடிவெடுத் துள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாகவும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது.

    இது தொடர்பாக பெரம் பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந் திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் நாளை (3-ந் தேதி, செவ்வாய்க்கிழமை) புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

    இந்த போராட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞ ரணி செயலாளர் என்.ஆர். சிவபதி தலைமை தாங்குகி றார். எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ் செல்வன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள் கின்றனர். அ.தி.மு.க. தொண் டர்கள் தவறாமல் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×