search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்நலக்குறைவு-விபத்தில் பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதல்வர் உத்தரவு
    X

    உடல்நலக்குறைவு-விபத்தில் பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதல்வர் உத்தரவு

    உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நல்லதம்பி உடல்நலக் குறைவால் காலமானார்.

    சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஞானசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார்.

    திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நாகராஜன் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    சென்னை பெருநகரக் காவல், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஜோதி ராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கி பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோபி உடல்நலக் குறைவால் காலமானார்.

    சென்னை பெருநகரக் காவல், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராஜு உடல்நலக் குறைவால் காலமானார்.

    சென்னை பெருநகரக் காவல், நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த ஜோக்கிம் உடல்நலக் குறைவால் காலமானார்.

    மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6ம் அணி “பி” நிறுமத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பாரதிராஜா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    நீலகிரி மாவட்டம், ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த சமயராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன் உடல் நலக் குறைவால் காலமானார்.

    தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தங்கபழம் உடல்நலக் குறைவால் காலமானார்.

    மதுரை மாநகரம், திடீர்நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த மாரிச்சாமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

    Next Story
    ×