search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பல பகுதிகளுக்கு மாநகர பஸ் சேவை நீட்டிப்பு
    X

    சென்னையில் பல பகுதிகளுக்கு மாநகர பஸ் சேவை நீட்டிப்பு

    வருவாயை பெருக்கும் நோக்கில் சென்னையில் பல பகுதிகளுக்கு மாநகர பஸ் சேவைகளை நீட்டிக்க அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் கூட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் இன்னும் பழைய நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பஸ்களில் பயணம் செய்த மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போது மின்சார ரெயில்களுக்கும், ஷேர் ஆட்டோவிற்கும் மாறியுள்ளனர். குறுகிய தூரத்திற்கு குறைந்த பஸ்சைவிட ஆட்டோவில் குறைவாக கட்டணம் வசூலிப்பதால் முன்பைவிட அதிகளவு பயணிக்கிறார்கள்.

    இதனால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது, கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம் நஷ்டத்தை ஈடு செய்யலாம் என்று எதிர்பார்த்த அதிகாரிகள் இப்போது விழி விதுங்குகிறார்கள்.

    மாநகர போக்குவரத்து கழகத்தினரும் ரூ.4 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2 கோடியே 80 லட்சம் வசூலாகிறது.

    இதனால் வருவாயை பெருக்க அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறுகிய தூரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்களை நீண்ட தூர வழித்தடமாக மாற்றி இயக்கி வருகிறார்கள். மேலும் ஒரு வழித்தடத்தில் வெவ்வேறு வழித்தட எண்களில் இயக்கப்பட்ட பஸ்களை இப்போது ஒரே எண்ணாக மாற்றி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



    ஐகோர்ட்டு முதல் கூடுவாஞ்சேரிவரை சென்ற மாநகர பஸ் நிறுத்தப்பட்டு இருப்பதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது போல பெரம்பூர், எம்.எம்.டி.ஏ., மாத்தூர் இடையே இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ் மீஞ்சூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வழித்தடங்களில் பஸ் சேவை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் சேவை விடப்பட்டு இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள், கல்லூரி மாணவர்கள் அதிகளவு மாநகர பஸ்களில் பயணம் செய்கின்றனர். திடீரென கட் சர்வீஸ் அளிப்பது, சேவையை விரிவாக்கம் செய்வது போன்றவற்றை செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். என்ற புகாரும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகர பஸ்கள் அனைத்தும் ஜி.பி.ஆர்.எஸ். வசதிக்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்காக ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    ஒரே வழித்தடத்தில் பல எண்களில் இயக்கப்படும் பஸ்கள் இனி ஒரே எண்ணாக மாற்றி இயக்கப்பட உள்ளது. தற்போது வருவாயை அதிகரிக்கும் நோக்கத்திற்காக பல இடங்களுக்கு சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.
    Next Story
    ×