search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

    மழை முற்றிலும் இல்லாததால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் உள்ள பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வறட்சியின் காரணமாக வைகை மற்றும் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் நீர்மட்டம் உயரவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் முற்றிலும் மழை ஓய்ந்தது. இதனால் இன்று பெரியாறு அணைக்கு நீர்வரத்து 128 கன அடியாக குறைந்துள்ளது. 225 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 32.48 அடியாக உள்ளது. 132 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31.95 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மானாவாரி பயிர்களை பயிரிட நிலத்தை தயார்படுத்திய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
    Next Story
    ×