search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியாகாந்திக்கு அழுத்தம் கொடுக்க மு.க.ஸ்டாலினுக்கு, ஜெயக்குமார் யோசனை
    X

    சோனியாகாந்திக்கு அழுத்தம் கொடுக்க மு.க.ஸ்டாலினுக்கு, ஜெயக்குமார் யோசனை

    தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கர்நாடகா அரசை நிர்பந்தப்படுத்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என சோனியாகாந்திக்கு, தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் முடக்கி இருக்கிறார்கள். மிகுந்த அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இத்தனை அழுத்தத்தை யாரும் கொடுத்தது இல்லை. நம்முடைய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினோம். சட்டசபையில் தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

    காவிரி பிரச்சினையில் எங்களை போன்று எந்த கட்சியும் அழுத்தம் கொடுத்ததில்லை. மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகள், எண்ணங்களுக்கு மதிப்பளித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள் என்று நம்புகிறோம்.

    மு.க.ஸ்டாலின் தங்களின் கூட்டணி கட்சி தலைவர்களான சோனியாகாந்தியிடமோ, ராகுல்காந்தியிடமோ, தமிழக விவசாயிகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசை நிர்பந்தப்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுத்து கெடு வைக்க வேண்டும். இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்ற அழுத்தத்தை அவர் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நாட்டு மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் யார் குற்றவாளி என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். விசாரணை ஆணையத்தின் முடிவுக்கு பிறகு எல்லா உண்மைகளும் தெரியவரும். குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #SoniaGandhi #MKStalin #MinisterJayakumar
    Next Story
    ×