search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் வெப்பத்தை விரட்டிய மழை
    X

    கொடைக்கானலில் வெப்பத்தை விரட்டிய மழை

    கொடைக்கானலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசினாலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இங்கு ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலமாகும். இந்த மாதங்களில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

    கொடைக்கானல் நகரில் நேற்று பகலில் மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில் மதியம் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மாலையில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது கொடைக்கானல், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூர், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது.

    அண்ணாசாலை, மூஞ்சிக்கல், லாஸ்கட்சாலை, டிப்போ சாலை, ஏரிச்சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் ஓடை பகுதிகளிலும் தண்ணீர் வரத்து காணப்பட்டது. இந்த மழையினால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் பேரி மரங்கள் பூக்கத் தொடங்கின. தற்போது மீண்டும் மழை பெய்திருப்பதால் வரும் சீசனில் பேரிக்காய் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×