search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் பாதுகாப்புக்கு பிரத்யேக ஆப் விரைவில் வினியோகம் - இஸ்ரோ தலைவர் சிவன்
    X

    மீனவர்கள் பாதுகாப்புக்கு பிரத்யேக ஆப் விரைவில் வினியோகம் - இஸ்ரோ தலைவர் சிவன்

    மீனவர் பாதுகாப்பதற்காக மொபைல் ஆப் ஏப்ரல் மாதம் வினியோகிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    அம்பத்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    சந்திராயன்-2 ராக்கெட் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தேசிய விஞ்ஞான நிபுணர் குழு ஆய்வு செய்து மேலும் பல சோதனைகளுக்கு பரிந்துரை அளித்துள்ளது. அதனால் சோதனை முடிந்த பிறகு அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்படும்.

    மீனவர் பாதுகாப்பதற்காக ‘மொபைல் ஆப்’ பணி முடியும் நிலையில் உள்ளது. அவை ஏப்ரல் மாதம் வினியோகிக்கப்படும். இதன் மூலம் மீனவர்கள் எவ்வளவு தூரத்தில் மீன் பிடித்து கொண்டு இருக்கிறார்கள், மீன்கள் எந்த பகுதியில் அதிகம் இருக்கும் என்பது உள்ளிட்ட பல தகவல்களை அளித்து கொள்ளலாம்.

    ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஐ செயற்கோள் வருகிற ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும். தற்போது நம்நாட்டிற்கு அதிக விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். புதிய விஞ்ஞானிகள் உருவாகவதற்கு புதிய பாடத் திட்டம் தேவையில்லை. தற்போது உள்ள பாடத் திட்டத்தையே சரியான முறையில் சொல்லி கொடுத்தாலே போதும்.

    மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகளில் பல தொழில நுட்பங்கள் அடங்கி இருக்கிறது. அதில் ஒரு தொழில் நுட்பத்தை நாம் கடந்த ஆண்டு அறிந்திருக்கிறோம்.

    மேலும் பல தொழில்நுட்ப சோதனைகள் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அது முடிந்தவுடன் மறுசுழற்சிக்கான ராக்கெட் ஏவ பயன்படுத்தப்படும். வருகிற 29-ந்தேதி ஜி.சாட் 6ஏ விண்ணில் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×