search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் மேல்முறையீட்டில் நீதி கிடைக்கும்- லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் மேல்முறையீட்டில் நீதி கிடைக்கும்- லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. பேட்டி

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் மேல்முறையீட்டில் நீதி கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய உள்துறை நேரடியாக நியமித்த 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து வழக்கு தொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கூறியதவது:-

    ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் பரிந்துரைகள், முடிவு, உத்தரவு என 3 பிரிவுகள் உள்ளது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளது.

    புதுவை சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் நடைமுறையில் சிக்கல்கள் உள்ளது. எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்று தெளிவில்லாமல் உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய தகுதியும் வரையறுக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதிலும் தெளிவு இல்லை.

    எனவே, யூனியன் பிரதேச சட்டம் 1963-ல் சட்டதிருத்தம் செய்ய வேண்டும். மேலும் அரசியல் அமைப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர வேண்டும். பாராளுமன்றம் விரைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதனையே எங்கள் தரப்பில் ஐகோர்ட்டில் வாதமாக வைத்தோம். இதன் மூலம் ஐகோர்ட்டு எங்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெளிவாக உள்ளது.

    அதே நேரத்தில் முடிவாக ஆனாலும் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குழப்பம் உள்ளதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், இது முரண்பட்டதாகும்.

    மக்களுக்காக நீதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக உள்ளது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே, ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் என நம்புகிறோம். ஜனநாயகத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் எதிரான இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்.

    இவ்வாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறினார். #tamilnews

    Next Story
    ×