search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினார்கள்
    X

    கோவை அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினார்கள்

    கோவை அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கடந்த ஒரு மாதமாக தொடர் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து இந்த நகை பறிப்பு நடந்தது. கோவை ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், பீளமேடு பகுதியில் அடிக்கடி நகை பறிப்பு நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 பெண்களிடம் 50 பவுன் நகை வரை பறிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நகை பறிப்பு கொள்ளையர்கள் பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் பெருமாள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். நகை பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    கேமிராவில் பதிவான காட்சியை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். கோவை செல்வபுரம், ராமநாதபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் நகை பறித்த காட்சி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை சோதனையின் போது 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள்.

    அவர்கள் சரவணம்பட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களில் ஒருவன போலீசாரிடம் தெரிவிக்கும் போது தனியார் நிறுவனத்தில் ரூ. 10 ஆயிரம் சம்பளத்திற்கு தான் வேலை பார்த்து வருகிறேன்.தனது சகோதரிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

    அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி விசாரித்த போது இந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அதனை எடுத்து வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தான் முதல் முறையாக நகை பறிப்பில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×