search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விஷயத்தில் இனி என்ன செய்யப்போகிறீர்கள்? சட்டசபையில் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
    X

    காவிரி விஷயத்தில் இனி என்ன செய்யப்போகிறீர்கள்? சட்டசபையில் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு இனி என்ன செய்யப்போகிறது? என்று மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். #cauverymanagementboard #MKStalin
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 3-ம் நாள் விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

    அதன்பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசு காலதாமதம் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். உங்களால் முடியாவிட்டால் எங்களிடம் விட்டுவிடுங்கள் என்றும் கூறினார்.



    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக, கொளத்தூர் தொகுதியில் மின் புதைவட பணிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என அந்த தொகுதியின் உறுப்பினரான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘மின் புதைவட பணிகளுக்கு சாலையில் துளையிட்டு கேபிள் அமைப்பதில் செலவு அதிகரிக்கிறது. கொளத்தூர் தொகுதியில் 43 கி.மீ. உள்ள சாலையில் 10 கி.மீ. அளவுக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன’ என்றார்.  #cauverymanagementboard #MKStalin #tamilnews
    Next Story
    ×