search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடையில் முழுமையாக தண்ணீர் வினியோகம் - சென்னை குடிநீர் வாரியம் திட்டம்
    X

    கோடையில் முழுமையாக தண்ணீர் வினியோகம் - சென்னை குடிநீர் வாரியம் திட்டம்

    சென்னை மாநகருக்கு கோடையில் முழுமையாக தண்ணீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டு உள்ளது.
    சென்னை:

    கோடையில் சென்னையில் குடிநீர் போதுமான அளவு வழங்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தற்போது 4.9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இதுதவிர கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் வினாடிக்கு 80 கன அடி வீதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட உயர்ந்து உள்ளது.

    நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினசரி 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. போதுமான தண்ணீர் இருப்பதால் சென்னையில் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினி யோகம் செய்யப்படுகிறது. இதில் வீராணம் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெரும்பாலும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.



    ஏரிகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் எடுக்கப்படுவதால் செப்டம்பர் மாதம் வரை போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. கோடைக்காலம் முழுவதும் தொடர்ந்து 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. எனவே கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.  #tamilnews
    Next Story
    ×