search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு செல்லும் ரத யாத்திரை - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    X

    தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு செல்லும் ரத யாத்திரை - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

    தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை 6 மாவட்டங்களுக்கு செல்கிறது. ரத யாத்திரை எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #RathaYatra
    சென்னை:

    தமிழகத்தில் ராமராஜ்ஜிய ரதயாத்திரை 6 மாவட்டங்களுக்கு செல்கிறது. கேரள மாநிலம் புனலூரில் இருந்து தமிழக எல்லையான புளியரையை வந்தடைந்தது.

    இந்த யாத்திரைக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டம் முழுவதும் வருகிற 25-ந்தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    புளியரையில் இருந்து செங்கோட்டை தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக செல்லும் ரதயாத்திரை இன்று இரவு விருதுநகர் மாவட்டத்தை சென்றடைகிறது.

    நாளை மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரத்தில் ரதயாத்திரை நடக்கிறது. 22-ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் யாத்திரை தூத்துக்குடி செல்கிறது. அங்கிருந்து மீண்டும் ரதயாத்திரை நெல்லை மாவட்டத்துக்குள் வருகிறது. 23-ந்தேதி நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு செல்கிறது. 24-ந்தேதி நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரதயாத்திரை அங்கு நிறைவடைகிறது.



    ரதயாத்திரைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி சாலை மறியல் போராட்டமும் நடக்கிறது. சட்டசபையிலும் இந்த விவகாரம் வெடித்துள்ளது. இதன் காரணமாக ரதயாத்திரை செல்லும் 6 மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #RathaYatra #tamilnews

    Next Story
    ×