search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடைத்தாள் திருத்தும்பணி புறக்கணிப்பு போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
    X

    விடைத்தாள் திருத்தும்பணி புறக்கணிப்பு போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

    11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அவர்களின் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ‘கிராப்’ கூட்டமைப்பின் சார்பில் கடந்த மாதம் சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

    அதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 2 கட்ட போராட்டத்தை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    அதுபற்றி ஜாக்டோ- ஜியோ கிராப் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இரா.சண்முகராஜன், இளங்கோவன் ஆகியோர் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்தல், ஊதிய முரண்பாடு களைதல், 21 மாத நிலுவை தொகை வழங்குதல், பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழு அமைத்துள்ளதை முற்றிலும் களைதல் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-ம் கட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மாதம் நடைபெறும் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பேரணி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றனர். #Tamilnews
    Next Story
    ×