search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத யாத்திரைக்கு எதிராக மறியல் - ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
    X

    ரத யாத்திரைக்கு எதிராக மறியல் - ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எல்.எல்.ஏ.க்கள் ரத யாத்திரைக்கு எதிராக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். #RathaYatra #TNAssembly #DMK #MKStalin
    சென்னை:

    ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் நடத்தப்படும் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.



    ஆனால், முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    வெளியேற்றப்பட்ட பிறகு சட்டமன்றத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.  #RathaYatra #TNAssembly #DMK #MKStalin  #tamilnews
    Next Story
    ×