search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைப்பு
    X

    மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைப்பு

    மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது. இனிமேல் ஐ.டி.பூங்காவுக்கு பயணிகள் எளிதில் செல்ல முடியும்.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    சென்ட்ரல் - எழும்பூரில் இருந்து விரைவில் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது. பயணிகள் எளிதில் விமான நிலையம் சென்றடைய முடியும். இதனால் மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு மேலும் உதவிகரமாக அமைய இருக்கிறது.



    இந்த நிலையில் 2-வது கட்டமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே ஐ.டி.பூங்கா பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாதவரம் - சோழிங்க நல்லூர் இடையேயான மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைக்கப்பட இருக்கிறது.

    மாதவரம் - சோழிங்க நல்லூர், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், கோயம்பேடு, ஆலந்தூர், மவுண்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மேலும் இணைக்கப்பட உள்ளது. இதனால் ஐ.டி.பூங்கா பகுதிக்கு பயணிகளால் எளிதில் செல்ல முடியும்.

    இந்த திட்டத்தில் முதல் வழித்தட பாதை, 2-வது வழித்தட பாதைகள் இணைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பயன்பெற உள்ளனர். ஐ.டி.பூங்கா பகுதிக்கு பயணிகள் செல்லும் போது குறைந்த நேரத்தில் விரைவாக செல்ல முடியும். இந்த திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
    Next Story
    ×