search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டர் தடுப்பு சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
    X

    குண்டர் தடுப்பு சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

    குண்டர் தடுப்பு சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்ற மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆணூர் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவில், ‘திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல, தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

    இதனையடுத்து பெரியார் சிலை உடைக்கப்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. எனவே எச்.ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘குண்டர் தடுப்பு சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று போலீசுக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது என்பது அதிகாரிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தில் கோர்ட்டு எப்படி தலையிட முடியும்?‘ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் எஸ்.துரைசாமி, ‘எச்.ராஜா தெரிவித்த கருத்தை, அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொண்டு, பெரியார் சிலைகளை உடைத்துள்ளனர். இதனால் தேவை இல்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவானது. ஒருவர் பொதுஅமைதியை சீர்குலைத்தால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யலாம். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம்‘ என்று வாதிட்டார்.

    அப்போது அரசு வக்கீல் டி.ராஜா, ‘எச்.ராஜா தனது கருத்தை திரும்ப பெற்றதோடு மன்னிப்பும் கேட்டு விட்டார். தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. மாநிலம் முழுவதும் அமைதி நிலவுகிறது’ என்றார்.

    இதையடுத்து நீதிபதி, ‘குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய உத்தரவிட முடியாது. மேலும், போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிவிட்டு, உடனடியாக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு அவர் காலஅவகாசம் வழங்கவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிடுகிறேன்‘ என்று தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×