search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த போது எடுத்த படம்.
    X
    ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த போது எடுத்த படம்.

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பன் வாக்குமூலம்

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் கார் டிரைவர் அய்யப்பன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். #Jayalalithaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிரு‌ஷணன், செயலாளர்கள் வெங்கடரமணன், முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, மனோஜ்பாண்டியன், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.

    ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு இவர்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த அய்யப்பனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் இன்று காலை 10.30 மணிக்கு அய்யப்பன் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜரானார்.

    நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார்.

    2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? போயஸ் காடனில் இருந்தீர்களா? அல்லது உங்கள் வீட்டில் இருந்தீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.


    ஜெயலலிதா உடல் நலம் சரியில்லை என்று உங்களுக்கு எப்போது தெரிய வந்தது? உங்களுக்கு தகவல் கொடுத்தது யார்? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது.

    ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நீங்கள் தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்றது உண்டா? ஜெயலலிதா மரணம் குறித்து உங்களுக்கு ஏதும் சந்தேகம் உண்டா? வேறு ஏதாவது தகவல் சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேள்விகள் கேட்கப்பட்டது.

    இவை அனைத்துக்கும் டிரைவர் அய்யப்பன் விரிவாக பதில் கூறினார். அவரது வாக்கு மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டது.

    இதே போல் ஜெயலலிதாவின் மற்றொரு கார் டிரைவரான கண்ணன் என்பவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. #Tamilnews
    Next Story
    ×