search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவக் கல்வி  இயக்குனர் நியமன விவகாரம்: சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
    X

    மருத்துவக் கல்வி இயக்குனர் நியமன விவகாரம்: சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் ரத்து செய்யப்பட்ட பிறகும் பணியில் நீடித்தது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #highcourt #HealthSecretary
    மதுரை:

    தமிழக மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமிக்கப்பட்டார்.  இந்த பணி நியமனத்தை ரத்து செய்து தன்னை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று கரூர் அரசு மருத்துவமனை டீனாக பணிபுரியும் டாக்டர் ரேவதி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், எட்விஜ் ஜோ நியமனத்தை கடந்த 12-ம்  தேதி ரத்து செய்தது. அத்துடன், தகுதியான நபரை மருத்துவ கல்வி இயக்குநராக நியமிப்பது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்கவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு வெளியான பின்னரும் மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நீடித்தார். இதையடுத்து ரேவதி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

    அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ நியமனம்  ரத்து செய்யப்பட்ட பிறகும் ஜனவரி 4 வரை அவர் எவ்வாறு பதவியில் நீடித்தார்? என கேள்வி எழுப்பினர்.

    இதுதொடர்க தமிழக சுகாதாரத்துறை செயலர் பிப்ரவரி 26-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #tamilnews #highcourt #HealthSecretary
    Next Story
    ×