search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் ரவுடி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
    X

    பெரம்பலூர் ரவுடி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது

    பெரம்பலூர் ரவுடி கொலையில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று திருநகர் அங்காளம்மன் கோவில் அருகே ரவுடி பன்னீர்செல்வம் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த வினோத், கபிலன் (22), அவரது நண்பர் கும்பகோணம் மேலதெருவை சேர்ந்த விக்னேஷ் (23) மற்றும் துறைமங்கலம் இலங்கை அகதிகள் முகாம் தலைவர் சற்குணராஜா மகன் நகுலேஷ்வரன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

    இந்த வழக்கில் துறைமங்கலத்தை சேர்ந்த ஏசுதாசையும் (23) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது அருந்தியபோது ஏற்பட்ட முன்விரோத தகராறில் வினோத் உள்ளிட்டோரை பன்னீர்செல்வம் மிரட்டி வந்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் வினோத் உள்பட 5 பேர் சேர்ந்து பன்னீர்செல்வத்தை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

    மேலும் சம்பவத்தின் போது பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியை சேர்ந்த மணிகண்டன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது வினோத் உள்ளிட்டோர் சுற்றி வளைத்ததும் மணிகண்டன் தப்பிவிட்டார். இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்கிற சந்தேகத்தில் போலீசார் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்காளம்மன் கோவில் அருகே பன்னீர்செல்வம் இருந்ததை எப்படி அறிந்து கொண்டு வந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தினர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    Next Story
    ×