search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16-வது ஆண்டாக பா.ம.க. மாதிரி பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்
    X

    16-வது ஆண்டாக பா.ம.க. மாதிரி பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

    சென்னையில் இன்று பா.ம.க.வின் 16-வது ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. டாக்டர் ராமதாஸ் வெளியிட டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதை பெற்றுக் கொண்டார். #ramadoss #pmk #budget

    சென்னை:

    பா.ம.க. சார்பில் ஆண்டு தோறும் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று பா.ம.க.வின் 16-வது ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. டாக்டர் ராமதாஸ் வெளியிட டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதை பெற்றுக் கொண்டார்.

    பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கையில் 94 தலைப்புகளில் மொத்தம் 417 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய தமிழ்நாடு பொறுப்புடைமை ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.

    * ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும்.

    * மணல் குவாரிகள் மூடப்படும்.

    * வரி சீர்த்திருத்தம் மூலம் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்க்கு திட்டமிடப்படும்.

    * எந்த திட்டமும் தனி நபரின் பெயரால் அறிவிக்கப்பட மாட்டாது.

    * மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

    * மாவட்டங்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்படும்.

    * தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதல்-அமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

    * அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

    * ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்.

    * மின்கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும்.

    * பஸ்கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்.

    * 3 ஆண்டுகளுக்கு பஸ் கட்டண உயர்வு கிடையாது.

    * சென்னையில் 500 இடங்களில் 10 ஆயிரம் சைக்கிள்களுடன் புதிய போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும்.

    * விவசாயிகளின் ரூ.22 ஆயிரம் கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * வேளாண் துறையில் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பள்ளி-கல்விக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

    * எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூ.43, பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.33 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும்.

    * 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    * கடலூரில் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை தொடங்கப்படும்.

    * ஏப்ரல் மாதம் முதல் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும்.

    * பஸ் நிலையங்கள், பூங்காக்களில் இலவச வை-பை வசதி செய்து தரப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வடிவேல் ராவணன், வக்கீல்பாலு, மு.ஜெயராமன், திலகபாமா, ராஜேஸ்வரி பிரபா, மாவட்ட தலைவர்கள் வி.ஜ.பாண்டியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews #ramadoss #pmk #budget

    Next Story
    ×