search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் கைது - அமலாக்கத் துறை அதிரடி
    X

    கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் கைது - அமலாக்கத் துறை அதிரடி

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். #KarthiChidambaram #INXMedia
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

    எனவே, லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.  அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்ப்டடது. 

    இதற்கிடையே தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். 

    பிப்ரவரி 17 முதல் 28-ம் தேதி வரையிலான கார்த்தி சிதம்பரத்தின் பயணத்திட்டத்திற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இந்த பயணத்திட்டம் தொடர்பான முழு  தகவல்களையும் சி.பி.ஐ.க்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

    அதேசமயம், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று மாலை கைது செய்துள்ளனர். #KarthiChidambaram #INXMedia #tamilnews
    Next Story
    ×