search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருப்பு, வெறுப்புகளுக்காக திறமையான போலீஸ் அதிகாரிகளை பந்தாடக்கூடாது- அன்புமணி
    X

    விருப்பு, வெறுப்புகளுக்காக திறமையான போலீஸ் அதிகாரிகளை பந்தாடக்கூடாது- அன்புமணி

    விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகளை பந்தாடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார். #policeofficers #anbumani

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காத காவல் துறை உயரதிகாரிகள் முக்கியத்துவமற்ற பணிகளில் முடக்கப்பட்டு, அவர்களின் திறமை வீணடிக்கப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 37 இ.கா.ப. அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கும்படி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை நிராகரித்த தன் மூலம் இந்த கண்டனத்தை மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.

    தமிழகக் காவல்துறையில் காவல்துறை கண்காணிப் பாளர் நிலை தொடங்கி காவல்துறை தலைமை இயக்குனர் நிலை வரை மொத்தம் 37 அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கும்படி தமிழக அரசின் சார்பில் முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 24 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், மீதமுள்ள 13 பேருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்துவிட்டது. பதவி உயர்வு மறுக்கப்பட்ட அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை.

    மாறாக, ஏற்கனவே, பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் பலர், அவர்களின் தகுதிக் கேற்ற பணிகளில் அமர்த்தப் படாமல், தகுதிக்கு குறைந்த பதவிகளில் அமர்த்தப்பட்டதைக் காரணம் காட்டித் தான் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது.

    தமிழக காவல் துறையின் 5 தலைமை இயக்குனர்களில் மிகவும் மூத்தவரான கே.பி. மகேந்திரன் தீயணைப்புத் துறை இயக்குனர் என்ற சாதாரண பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    தலைமை இயக்குனர் ஜாங்கிட் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இத்தகைய பதவிகளில் தான் அமர்த்தப்பட்டு வருகிறார்.

    இன்னொரு தலைமை இயக்குனர் காந்தி ராஜன் என்பவர் மனித உரிமை ஆணைய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதியான சூழல் மிகவும் முக்கியம் ஆகும். அதைப் பாதுகாப்பதற்கு ஏற்ற திறமையான அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் அமர்த்தி அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் அதிகாரிகளை பந்தாடக் கூடாது. இவ்வி‌ஷயத்தில் இதுவரை நடந்த தவறுகளை அரசு இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews #policeofficers #anbumani

    Next Story
    ×