search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி வழக்கின் தீர்ப்புக்கு தமிழக விவசாயிகள் - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
    X

    காவிரி வழக்கின் தீர்ப்புக்கு தமிழக விவசாயிகள் - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

    காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். #SC #CauveryWater #CauveryVerdict #TN #Karnataka
    சென்னை:

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. தமிழகத்திற்கான காவிரி நீர் அளவை குறைத்ததுடன், கர்நாடகத்திற்கு கூடுதல் தண்ணீர் ஒதுக்க உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளது.

    இதுதவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கர்நாடக மாநிலம் புதிய அணைகள் எதுவும் கட்டக்கூடாது போன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.



    காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டதால் தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

    தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறும்போது, ‘காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 14 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி, தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 192 டிஎம்சி காவிரி நீரை வாங்கி கொடுத்தவர் கருணாநிதி’ என்றார்.

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக நலனை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ளது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேல்முறையீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதை வரவேற்பதாக தெரிவித்தார். #SC #CauveryWater #CauveryVerdict #TN #Karnataka  #tamilnews
    Next Story
    ×