search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - மின் வாரிய ஊழியர்கள் திட்டமிட்டபடி ஸ்டிரைக்
    X

    முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - மின் வாரிய ஊழியர்கள் திட்டமிட்டபடி ஸ்டிரைக்

    நாளை நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிர்வாக காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடக்கும் வரை வேலைநிறுத்தம் என மின் வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. இதை கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி அன்று சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பை வெளியிட்டன.

    வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாக கடந்த மாதம் 22-ம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்த கொண்டனர். அப்போது 12-ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, வரும் 16-ம் தேதி (நாளை மறுநாள்) முதல் நாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே நாளை 15-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளர் நலத்துறை இன்று அறிவித்துள்ளது. 

    இதனை அடுத்து, பேச்சுவார்த்தை நடக்கும் வரை வேலை நிறுத்தம் என மின் வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  #TNEB #TamilNews
    Next Story
    ×