search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பக்கோடா விற்பனை போராட்டம்: நாராயணசாமி பங்கேற்பு
    X

    புதுவையில் பக்கோடா விற்பனை போராட்டம்: நாராயணசாமி பங்கேற்பு

    புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா விற்பனை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார். #pakoda
    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒரு டி.வி. நிகழ்ச்சியில் வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசும்போது, பக்கோடா விற்பனை செய்தாலே தினமும் ரூ.200 சம்பாதிக்கலாம் என கருத்து தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் பக்கோடா விற்பனை செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் பக்கோடா, பஜ்ஜி தயாரித்து விற்பனை செய்யும் நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் பட்டமளிப்பு விழா உடை அணிந்தும், ‘டை’ கட்டியும் வந்து அடுப்பு மூட்டி பக்கோடா, பஜ்ஜி தயாரித்து ‘மோடி பக்கோடா’, ‘மோடி பஜ்ஜி’ என கூவி கூவி விற்பனை செய்தனர். #Tamilnews
    Next Story
    ×