search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல் சிகிச்சை
    X

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல் சிகிச்சை

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி பணிகள் அனைத்தையும் செயல் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கவனித்து வருகிறார். வீட்டில் ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியின் உடல்நிலையை அவ்வப்போது டாக்டர்கள் சென்று பரிசோதித்து வருகின்றனர்.

    அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் கழுத்தில் டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் அவர் பேசமுடியாத நிலையில் இருந்தாலும் அவ்வப்போது வீட்டு வாசல் வரை சக்கர நாற்காலியில் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அதன்பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி.ஐ.டி. காலனியில் உள்ள அவருடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் இல்லத்துக்கும் சென்று வந்தார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்த கருணாநிதியை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டாக்டர் எஸ்.எம்.பாலாஜி முக சீரமைப்பு நிலையத்துக்கு பல் பரிசோதனைக்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அழைத்து வந்தார்.

    அவருக்கு டாக்டர் எஸ்.எம். பாலாஜி மற்றும் டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் சிகிச்சை முடிந்தது. பின்னர், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு கைகொடுத்து கருணாநிதி நன்றி கூறினார். அதன்பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். 
    Next Story
    ×