புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வருகிற மார்ச் மாதம் வரை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்க முடிவு செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பினோம். ஆனால், அவர் அதை திருப்பி அனுப்பி விட்டார்.
கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறார். ஒரு மாதத்திற்கு 4 முறை கோப்புகளை அனுப்புகிறோம். ஆனால், கவர்னர் சிக்கல் ஏற்படுத்தி வருகிறார்.
இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பான டெண்டரில் முறைகேடு நடந்து உள்ளதாக பிரதமருக்கு கவர்னர் கடிதம் எழுதியுள்ளார். இது அப்பட்டமான பொய். வேட்டி-சேலை வாங்குவதில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இன்னும் டெண்டர் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் கவர்னர் எப்படி ஊழல் என்று கூறுகிறார்? அவர் தொடர்ந்து எல்லை மீறி செயல்பட்டு வருகிறார். ஊழல் என்று கூறும் அவர் அதை நிரூபிக்க முடியுமா?
அரைவேக்காட்டுத்தனமாக எந்த விஷயத்தையும் ஆராயாமல் அரசின் மீது பழிசுமத்தி கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறார். ஆட்சியில் தவறு நடந்தது என்று அவர் புகார் தெரிவித்து இருப்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். கவர்னர் பதவிக்கே கிரண்பேடி தகுதி இல்லாதவர்.
இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.