சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது கருணாநிதிக்கு மு.க.அழகிரி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்த அழகிரியிடம் ‘‘கருணாநிதி உடல்நிலை எப்படி உள்ளது’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அழகிரி பதில் அளிக்கையில், ‘‘கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். நான் பேசியவற்றை முழுமையாக கேட்டார்’’ என்றார்.
‘‘ரஜினியை சந்திப்பீர்களா?’’ என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த அழகிரி, ‘‘ரஜினியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. நேரம் ஒதுக்கியதும் சந்திப்பேன்’’ என்றார்.