search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடவை தடுக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு
    X

    ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடவை தடுக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு

    ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடவை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா புகார் மனு கொடுத்துள்ளார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வரும் பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்து புகார் மனு கொடுத்திருந்தார்.

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் 100 கோடி ரூபாய்க்கும் மேல் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இப்போது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திலும் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அமைதியான சுமூகமான முறையில் தேர்தல் நடைபெறும் என்பது கட்டுக்கதையாகி விட்டது. வாக்காளர்களுக்கு முறைகேடாக அளிக்கப்படும் பணத்தை தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றுதான் நினைத்தோம்.

    ஆனால் ஒரே நாளில் 100 கோடிக்கும் மேல் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்துள்ளதை பார்க்கும்போது இந்த தேர்தல் அமைதியாக நேர்மையாக நடைபெறும் என்கிற எங்களது நம்பிக்கை தகர்ந்து போய் உள்ளது.

    வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் இதுவரை தொகுதியில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு அ.தி.மு.க. பணம் வினியோகம் செய்துவிட்டது.

    அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதால் இனி அவர் தேர்தலில் நிற்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    அது மட்டுமின்றி இனிமேலும் பணப்பட்டுவாடா நடைபெறாத அளவுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி தேர்தலை நேர்மையாக நியாயமாக நடத்திட ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×