search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினம் அறிவிப்பு: தலைமை பதிவாளர் உத்தரவு
    X

    2018-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினம் அறிவிப்பு: தலைமை பதிவாளர் உத்தரவு

    சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு 2018-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு 2018-ம் ஆண்டுக் கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டுக்கும், 15-ந் தேதி திருவள்ளுவர் தினத்துக்கும், 16-ந் தேதி உழவர் தினத்துக்கும், 26-ந் தேதி குடியரசு தினத்துக்கும், மார்ச் 29-ந் தேதி மகாவீர் ஜெயந்திக்கும், 30-ந் தேதி புனித வெள்ளிக்கும் விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 30-ந் தேதி ஐகோர்ட்டு விடுமுறை தினமாகும்.

    மே 1-ந் தேதி மே தினத்துக்காகவும், ஜூன் 15-ந் தேதி ரம்ஜான் பண்டிகைக்கும், ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரத்தினத்துக்கும், 22-ந் தேதி பக்ரீத் பண்டிகைக்கும், செப்டம்பர் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்திக்கும், 21-ந் தேதி மொகரத்திற்கும், அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்திக்கும், 18-ந் தேதி ஆயுதபூஜை, 19-ந் தேதி விஜயதசமி பண்டிகைக்காகவும் விடுமுறை விடப்படுகின்றன.

    நவம்பர் 6-ந் தேதி தீபாவளி பண்டிகைக்காகவும், நவம்பர் 5 மற்றும் 7-ந்தேதிகள் ஐகோர்ட்டு விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்படுகிறது. 21-ந் தேதி மிலாதுநபி, டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவும் விடுமுறை விடப்படுகின்றன. பொங்கல், தெலுங்கு புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள், கிருஷ்ணஜெயந்தி ஆகிய தினங்கள் விடுமுறை நாளில் வருகின்றன.

    அதேபோல ஐகோர்ட்டு கோடை விடுமுறை மே 1-ந் தேதி தொடங்கி, ஜூன் 3-ந் தேதி வரை விடப்படுகிறது. தசரா பண்டிகை விடுமுறை அக்டோபர் 13-ந்தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் விடுமுறை டிசம்பர் 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் விடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×