search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு
    X

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு

    ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி சார்ந்த நிறுவனங்களின் இன்று 2-வது நாள் போராட்டத்தால் மொத்தம் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை) வரியால் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் வெகுவாக பாதிக்கப்படும் ஆகவே ஜி.எஸ்.டி. வரியை விதிக்க கூடாது என வலியுறுத்தி ஜவுளி நிறுவனங்கள் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முதல் ஸ்டிரைக் தொடங்கியது. இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. ஈரோடு மில் துணிகள் வணிகர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், ஜவுளி விற்பனையாளர்கள் சங்கம், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கம், விசைத்தறி துணி வணிகர்கள் சங்கம், பிளீச்சிங் பட்டறை சங்கம் என்பன உள்பட மொத்தம் 22 சங்கத்தினர் இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் அதனை சார்ந்த நிறுவங்கள் ஜவுளி கடைகள் 2-வது நாளாக ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டன. விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டன.

    அந்த ஜவுளி நிறுவனங்கள் உள்ள கடை வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஜவுளி சார்ந்த நிறுவனங்களின் இன்று 2-வது நாள் போராட்டத்தால் மொத்தம் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.


    மேலும் அனைத்து ஜவுளி வியாபரிகள் இன்று 2-வது நாளாக எந்த வங்கியிலும் பணம் எடுக்கவோ போடவோ செய்யவில்லை. இதனால் ஈரோடு வங்கிகளில் பண பரிவர்த்தனை முடக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பை கண்டித்து ஈரோட்டில் 22 ஜவுளி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பிரம்மாண்ட இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.

    ஆயிரக்கணக்கான பேர் இதில் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர்.

    Next Story
    ×