
ம.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:–
நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுவதற்கு ராஜ்பவன், உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், திருநள்ளார் (காரைக்கால் பகுதி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க. சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.