என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
    • அபிஷேக் சர்மா 15 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் - ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் வெளியேறினார்.

    18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியாவால் 111 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை சுவைத்தது. 

    • 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் - ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    • அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் - ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    • சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
    • லீக் சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தோல்வியை சந்திக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    மேலும், கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகள் களம் கண்டன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை பழிதீர்க்குமா அல்லது இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின
    • 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    16.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
    • சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    • கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார்
    • மஹிகா சர்மாவை டேட் செய்துவருகிறார் ஹர்திக்.

    இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாஷாவிற்கும், அவரது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். மும்பையில் உள்ள ஷோரூமில் இந்த காரை நடாஷா மற்றும் அவரது மகன் அகஸ்தியா பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    காரின் பின்னால் "தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு" என்ற வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்மூலமே இது ஹர்திக் வழங்கும் பரிசு என தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்டநாட்களாக காதலித்து வந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி 2024-ல் பிரிந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும், மகனை மாறிமாறி கவனித்து வருகின்றனர்.

    விவாகரத்துக்குப் பின் மாடலிங் துறையில் உள்ள மஹிகா ஷர்மா என்பவரை ஹர்திக் காதலித்து வருகிறார். இந்தவாரம் கூட காதலியின் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
    • கண்டியில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    • பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளார்.
    • இந்த ஆண்டு இறுதியில் தனது கால்பந்து பயணத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

    பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் (மொத்தம் 79) அடித்த வீரராக இருக்கும் நெய்மர், இந்த ஆண்டு இறுதியில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    காயம் காரணமாக பல போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர், தற்போது தனது சிறு வயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார். பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடியுள்ளார் நெய்மர்.

    இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நெய்மர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இப்போது என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு குறித்தும் தெரியாது. அநேகமாக டிசம்பர் வந்ததுடன் நான் ஓய்வு பெறுவேன் என நினைக்கிறேன். ஆண்டின் இறுதியில் என் மனது என்ன நினைக்கிறதோ அப்படிதான் நடக்கும். இந்த ஆண்டு மிக முக்கியமானது. சந்தோஷ் கிளப்பிற்கு மட்டுமல்ல, பிரேசில் தேசிய அணிக்கும். உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டு என்பதால் எனக்கும் முக்கியமானது. இந்த சீசனில் 100 சதவீதம் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    • நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    • நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை இன்று (22-ம் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 17 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம். அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார். எனவே தென் ஆப்பிரிக்காவும் அவரை உடனே வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்சர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுழற்பந்து வீரருக்கு வாய்ப்பா அல்லது 3 வேகப்பந்து வீரரா என்பது ஆடுகள தன்மையை பொறுத்த முடிவாகும்.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மார்கிராம் (178 ரன்), ரிக்கெல்டன் (145), குயின்டன் டி காக் (118) ஆகியோரும், பந்துவீச்சில் நிகிடி (8 விக்கெட்), மார்கோ யான்சென் (7 விக்கெட்), ரபாடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சுமார் 50 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • அபிஷேக் சர்மாவை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன்.
    • கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார் என்றார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படுபவர்களைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்.

    அவரது ஆட்டத்தை நினைத்து ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.

    அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம்.

    கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம் என தெரிவித்தார்.

    ×