என் மலர்

  ஐ.பி.எல் செய்திகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ரசிகர்களின் பலத்த வரவேற்புகளுக்கு இடையே இன்று சென்னை வந்தடைந்தனர். #IPL2018 #CSK
  சென்னை:

  ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.

  அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர். இதனை அடுத்து, பேருந்துகள் மூலம் வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். காவிரி பிரச்சனையில் சென்னையில் இந்த ஆண்டு ஒரே ஒரு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைவதில் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
  புதுடெல்லி:

  11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. 18 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் 2-வது அணியாக முன்னேறியது. அந்த அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது.

  நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றது.

  பிளேஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்
  (14 புள்ளி), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. இதில் ராஜஸ்தானுக்கு போட்டிகள் முடிந்து விட்டது. மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு தலா 1 ஆட்டங்கள் உள்ளன.

  டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதால் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. அந்த அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.  இன்றைய கடைசி நாள் லீக்கில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. டெல்லி பெரோ சா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  இரவு 8 மணிக்கு புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

  நடப்பு சாம்பியனான மும்பை அணி டெல்லியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் மும்பை அணி வெளியேற்றப்படும்.

  மும்பை வென்று, கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் 14 புள்ளியின் சம நிலையில் இருக்கும். அப்படி நிகழும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். ராஜஸ்தான், பஞ்சாப்பை ஒப்பிடுகையில் மும்பை ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தினால் அந்த அணி வாய்ப்பை பெறும் சூழ்நிலை உருவாகும்.

  இன்றைய ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

  மும்பை வென்று, பஞ்சாப் தோற்றால் ராஜஸ்தான், மும்பை அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேடில் ஒரு அணி தகுதி பெறும். மும்பை தோற்று சென்னை அணியை பஞ்சாப் வீழ்த்தினால் ராஜஸ் தான், பஞ்சாப் அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேட்டில் ஒரு அணி நுழையும்.

  பஞ்சாப்பின் ரன்ரேட் -0.49 ஆக உள்ளது. இதனால் அந்த அணி சென்னைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். சென்னை அணி வலுவானது என்பதால் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்சை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் உள்ளது.  மேலும், மும்பை - டெல்லி ஆட்டத்துக்கு பிறகு தான் இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால் அதன் முடிவுக்கு ஏற்றது போல விளையாடலாம். இந்த போட்டித் தொடரில் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய பஞ்சாப் பின்னர் தொடர் தோல்வியால் நெருக்கடிக்கு ஆளானது. தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு எதிராக அதிரடியாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

  ஏற்கனவே வாய்ப்பை இழந்த டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி அந்த அணியை வெளியேற்றும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. இதனால், இன்றைய இரண்டு போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
  மும்பை:

  ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

  மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.  கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

  பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

  4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

  ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

  பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

  பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
  நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

  இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ரிஷப் பாந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #IPL2018 #IPL18

  இந்திய கிரிக்கெட் அணியில் நெடுங்காலமாக தோனி விக்கெட் கீப்பராக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு விருத்திமான் சாஹா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி விக்கெட் கீப்பராக கலக்கிக்கொண்டு வரும் நிலையில், கூடுதல் விக்கெட் கீப்பர்களை ஆடும் லெவனில் அணி நிர்வாகம் அதிகமாக களமிறக்குவது இல்லை. அடுத்தாண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார் என்பதால், இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதான ஒன்றுதான்.

  2019 ஆண்டுக்கு பின்னரும் தோனி விளையாடுவதும், ஓய்வு பெறுவதும் அவரது கையில் மட்டுமே உள்ளது. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்தால், அவரை ஓரங்கட்டவும் முடியாது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை பார்க்கும் போது இந்திய அணியில் அவர்களுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்றே எண்ண தோன்றுகிறது.


  முக்கியமாக டெல்லி அணியில் உள்ள ரிஷப் பாந்த். இதுவரை 577 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 180 ஆகும். 20 வயதே ஆன அவரது ஆட்டம் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக பஞ்சாப் வீரர் கேஎல் ராகுல் 537 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 163. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 371 ரன்கள், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 353 ரன்கள், மும்பை வீரர் கிஷான் 238 ரன்கள் எடுத்துள்ளனர்.

  சஞ்சு சாம்சன் கடந்த சில ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அவருக்கு அணியில் இடம் கிடைத்த பாடில்லை. தற்போது, பாந்த், ராகுல், கிஷான் என இளம் வீரர்களின் செயல்பாடுகள் திருப்தி அளித்தாலும், அவர்கள் அனைவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைப்பதும் சாத்தியமில்லை.


  கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தினாலும், அடுத்து வரும் தொடர்களிலும் அவர்களது இடம் கேள்விக்குறியானது தான். எனினும், இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், அப்போது தான் எதிர்காலத்தில் அணி சிறப்பான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடப்பு ஐபிஎல் தொடரில் சராசரி ரன்கள் மட்டுமே அடித்து எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி வெற்றி வாகைசூடுவது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. #IPL2018 #SRH #SunRisersHyderabad

  நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. முன்னணி வீரர்கள் என அனியில் பெரிதாக யாரும் இல்லை. தடை காரணமாக வார்னர் விளையாட முடியாத சூழல். நட்சத்திர வீரராக உள்ள தவான், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மணிஷ் பாண்டே ஆகியோரும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

  மொத்தத்தில் அணியின் பேட்ஸ்மேன்கள் இதுவரை தங்களது திறமையை வெளிக்காட்டாமலேயே உள்ளனர். இதனால், அந்த அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் சராசரி ரன்களையே எடுத்து வருகிறது. ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 130 முதல் 150 ரன்கள் வரை மட்டுமே எடுத்துள்ளது.

  பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான இரு சேசிங் ஆட்டங்களிலும் மட்டுமே அந்த அணி 170 ரன்களை தாண்டியுள்ளது. ஆனால், அந்த இரு போட்டிகளிலுமே ஐதராபாத் தோல்வியடைந்தது. மற்ற சேசிங் போட்டிகளிலும் எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டிவிடுவதால் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அழுத்தம் இல்லை. இதனால், மிக எளிதாகவே பல ஆட்டங்களை அந்த அணி வென்றுள்ளது.  பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை பொறுத்த வரை மிகவும் வலுவாக அந்த அணி இருப்பதனாலே பிளே-ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. எதிரணியில் உள்ள முக்கிய வீரர்களின் விக்கெட்டை விரைவில் காலி செய்வதினால், அந்த அணியை குறைந்த ரன்களில் சுருட்ட முடிகிறது. திட்டமிடப்பட்ட நேர்த்தியான பந்துவீச்சு மட்டுமே இதற்கு காரணம்.

  15 ஓவர்களுக்கு பிறகு எந்த அணியும் அதிரடியாக விளையாட தொடங்கிவிடும். எனவே, கடைசி 5 ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். ஆனால், ஐதராபாத் அணி பவுலர்கள் இந்த கடைசி கட்ட ஓவர்களில் தான் மிகச்சிறப்பாக பந்து வீசுகின்றனர்.

  புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், யூசுப் பதான் ஆகியோர் ஒவ்வொரு ஆட்டத்திலும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். “ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவது சிறப்பான ஒன்றாக உள்ளது. ஆனாலும் பலமுறை கடின முயற்சிகளுக்கு பின்னரே அது கிடைத்துள்ளது. எங்களது பந்துவீச்சு அபாரமான ஒன்றாக உள்ளது, பீல்டிங்கும் கூட” என ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.  2016-ம் ஆண்டு ஐதராபாத் அணி சாம்பியன் அணியான ஐதராபாத், இதேபோல, சிறப்பான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக இம்முறை சாம்பியன் கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர். #IPL2018 #SRH #SunRisersHyderabad
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.யில் மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முதலிடத்தை பிடித்துள்ளது. அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்துக்கு அமோக வரவேற்பு உள்ளது. #IPL2018

  இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி என்றாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் இந்தியாவில் ஐந்தில் 4 பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்பதே கிரிக்கெட் விளையாட்டின் மீதான இந்தியர்களின் காதலுக்கு சான்று. அதனால் தான் என்னவோ நமது நாட்டின் 2-வது தேசிய விளையாட்டாகவே கிரிக்கெட் போட்டி பார்க்கப்படுகிறது.

  ஒருநாள், டெஸ்ட் என்ற 2 வகை பரிமாணத்தில் மட்டுமே பயணித்து வந்த கிரிக்கெட்டை, அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது 20 ஓவர் போட்டி தான். பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் பஞ்சமில்லாத இந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. அதிலும் ஐ.பி.எல். என்னும் இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்களின் ரசனைக்கும், கொண்டாட்டத்துக்கும், உற்சாகத்துக்கும் பெரும் தீனி போட்டு வருகிறது.


  நடப்பு சாம்பியன் மும்பை அணி

  இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டித்தொடர் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஐ.பி.எல். போட்டித்தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் அணியாக வாகை சூடிக்கொண்டிருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

  டோனி தலைமையில் களமிறங்கி பட்டையை கிளப்பி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் வரவேற்பு அமோகமாகவே இருக்கிறது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் மாலையில் ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் எல்லோரும் டி.வி.க்கள் முன்பு குஷியாக அமர்ந்துவிடுகின்றனர். சீரியல் உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புறந்தள்ளி விட்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். 

  இதனால் டி.வி.யில் மவுசு அதிகரித்து ஐ.பி.எல். போட்டி தான் ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. அதுவும் சென்னை அணி விளையாடுகிறது என்றால் சொல்லவே வேண்டாம். கடைசி பந்து வரை கண்டு மகிழ்கிறார்கள். போட்டி தொடங்கி முடியும் வரை வீட்டிலேயே சமத்து பிள்ளையாக இருப்பதால் பெற்றோரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பல வீடுகளில் பெற்றோரும் கண்விழித்து கிரிக்கெட்டை பார்த்து ரசிக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள்.

  அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேலை நேரங்களில் அடிக்கடி செல்போனில் கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொள்ளவும் தவறுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் ஏராளமானோர் வீடுகளில் சீரியல்களுக்கு தற்காலிக ஓய்வு தரப்பட்டு இருக்கிறது. அதிலும் சென்னை அணி ஆடும் நாட்களில் டி.வி.க்கள் முன்பு சரணாகதி ஆகி விடும் பிள்ளைகள், தங்களது அம்மாக்களை டி.வி. பக்கம் நெருங்க விடுவதே இல்லை. எந்த சூழ்நிலையிலும் டி.வி.யின் ரிமோட் கைமாறாதபடி ஜாக்கிரதையாக பார்த்து கொள்கிறார்கள். அதேநேரம் செல்போனில் ஸ்கோரை பார்த்து ஆறுதல் அடையும் ரசிகர்களையும் கணக்கிட முடியாது.


  2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத் அணி

  கடைசி பந்து வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரும் ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை பெருகி வருவதை யாராலும் மறுக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பலவித போராட்டங்கள் வெடித்தன. எத்தனை போராட்டங்கள் வந்தாலும் மஞ்சள் நிற சீருடையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடிய ஆட்டத்தை பார்க்க திரண்டு வந்த ரசிகர் பட்டாளத்தையும், புனேயில் சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க சிறப்பு ரெயில் மூலம் உற்சாகமாக ரசிகர்கள் சென்றதையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

  இப்படி எல்லா தரப்பினரையும் தன்னகத்தே கட்டிப்போட்டு இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கு ஆண்டுக்கு ஆண்டு ஆதரவும், வரவேற்பும் பெருகி தான் வருகிறது. சென்னை அணியை தன் சொந்த அணியாகவே ரசிகர்கள் பாவிக்க தொடங்கிவிட்டனர். வெற்றி அடைந்தால் மனதார வாழ்த்துவதும், தோல்வி அடைந்தால் மீம்ஸ்கள் மூலம் வறுத்தெடுப்பதுமாக தேசிய அணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சென்னை அணிக்கு ரசிகர்கள் அளித்து வருகிறார்கள்.

  பரபரப்புக்கும், அதீத எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லாத ஐ.பி.எல். திருவிழா, ரசிகர்களின் முக்கிய பெருவிழாவாக மாறிவிட்டது. இங்கிலாந்தில் தோன்றினாலும் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் விளையாடப்படும் கிரிக்கெட் விளையாட்டுக்கு, ஐ.பி.எல். திருவிழா சரியான தீனி அளித்திருக்கிறது. கோடை வெயிலிலும் ரசிகர்களுக்கு முழு நேர குளிர் ஜுரத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொடுக்கிறது என்றால் அது மிகையாகாது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது. 2014-ம் ஆண்டில் இதே போன்ற நிலையில் இருந்து அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியப்பட வைத்தது. #MumbaiIndians

  மூன்று முறை ஐபிஎல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன் லீக் கோப்பையை கைப்பற்றிய அணி என பலத்த எதிர்ப்பார்ப்புகளோடு இந்தாண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கடும் நெருக்கடியான நிலையில் உள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

  சென்னை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே மும்பை வென்றுள்ளது. கிட்டத்தட்ட வெளியேறிவிட்ட நிலைதான், ஆனால், ஏதாவது அதிசயம் நடந்தால் மும்பை பிளே-ஆப் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி முதல் பாதி ஐபிஎல் ஆட்டங்கள் துபாயில் நடந்தன.

  தற்போது போலவே, அப்போதும் மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்றது. முதல் ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வியை அடுத்து ஆறாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அதனை அடுத்து பெங்களூர் அணியை வென்றாலும், சென்னைக்கு எதிரான அடுத்த போட்டியில் தோல்வி மீண்டும் கிடைத்தது.

  கெய்ரோன் பொல்லார்ட்

  தற்போதைய நிலை போல அப்போதும், எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி. மும்பை இனி அவ்வளவுதான், வெளியேறிவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், திடீர் விஸ்வரூபம் எடுத்த அந்த அணி யாருக்கு எதிராக தோற்றதோ அந்த அணிகளை அடித்து துவைத்து தொடர் வெற்றிகளை பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

  முதல் எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி என்ற நிலையில், அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே மும்பை தோல்வி அடைந்திருந்தது. பிளே-ஆப் சுற்றில் மும்பை வெளியேறியது என்றாலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

  இந்த ஆண்டும், இதே போன்ற அதிசயங்கள் நடக்கும் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பு தவிர வீரர்கள் செயல்பாடும் முக்கியமான ஒன்றே. எப்போதாவது அடிக்கும் கேப்டன் ரோகித் சர்மா இனி எல்லா ஆட்டங்களிலும் ஜொலிக்க வேண்டியது அவசியமான ஒன்று.

  கெயில், பிராவோ, ரஸ்ஸெல் ஆகிய மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் மற்ற அணிகளில் கலக்கிக்கொண்டிருக்க, மும்பை அணியில் உள்ள கெய்ரோன் பொல்லார்ட் எதற்கு இருக்கிறோம் என தெரியாமலேயே இருக்கிறார். பாண்டியா சகோதரர்கள், இஷான் போன்ற இளம் வீரர்கள் தங்களது திறனை இன்னும் காட்ட வேண்டும்.

  பந்து வீச்சு பிரிவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தால் மட்டுமே அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி சாத்தியம். அனைத்து போட்டிகளில் வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி - தோல்வியை பொறுத்தே மும்பை பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு உள்ளது. #MumbaiIndians #IPL2018
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2018 #MI #RCB
  பெங்களூரு:

  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

  மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, சென்னைக்கு எதிராக), 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (பஞ்சாப், டெல்லி அணிக்கு எதிராக), 5 தோல்வி அடைந்து பின் தங்கி இருக்கிறது.

  மும்பை அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, இவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சில் மெக்லெனஹான், குணால் பாண்ட்யா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வலுவான சென்னை அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் மும்பை அணி களம் காணும்.

  பெங்களூரு அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் பெங்களூரு அணி இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அரை சதம் அடித்தாலும் அது அணிக்கு பலன் அளிக்கவில்லை. அந்த அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் பெங்களூரு அணி உள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  மும்பை-பெங்களூரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி முயற்சிக்கும். இரு அணிகளுக்கும் இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

  ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இந்த இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 14 முறையும், பெங்களூரு அணி 8 தடவையும் வென்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IPL2018 #MI #RCB
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் டெண்டுல்கர், அப்பவப்போது தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். #CSK #IPL2018 #HarbhajanSingh

  சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

  இந்நிலையில், நேற்றைய போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளதாவது, “தோல்வி என்னும் அடி சறுக்கியது ஆனால் நாம் யானை போல் எழுவதற்கு நேரம் பிடிக்க போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் . தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்” என அவர் கூறியுள்ளார்.


  கடந்த எல்லா ஐபிஎல் சீசனிலும் ஹர்பஜன் மும்பை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #CSK #IPL2018 #HarbhajanSingh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதும் ஐதராபாத் அணி, ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. #IPL2018 #RRvSRH
  ஜெய்ப்பூர்:

  ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. ஜெய்ப்பூரில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

  ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றி பெற்று முன்னேற்றப் பாதைக்கு செல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

  ஐதராபாத்திடம் ஏற்கனவே 9 விக்கெட்டில் தோற்று இருந்தது. இதற்கு ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐதராபாத் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 2 ஆட்டத்தில் குறைவான ரன் எடுத்து பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றது.

  மேலும் ராஜஸ்தானை ஏற்கனவே தோற்கடித்து இருந்ததால் மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் நம்பிக்கையில் உள்ளது. தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் வென்ற அந்த அணி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

  இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.  பெங்களூர் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், டெல்லியை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, சென்னை அணிகளிடம் தோற்று இருந்தது.

  கொல்கத்தா அணியிடம் ஏற்கனவே அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் பெங்களூர் அணி இருக்கிறது.

  கொல்கத்தா அணி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 2 போட்டியில் தோற்ற அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும். ஏற்கனவே அந்த அணியை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். #IPL2018 #RRvSRH
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvMI #Dhoni
  புனே:

  ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்தது.

  புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 19.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  சென்னை அணி சந்தித்த 2-வது தோல்வியாகும். இந்த தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

  இந்த ஆட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதை உணர்ந்து கொள்வது முக்கியமானது. இது போன்ற தோல்வியில் இருந்து அதிகமாக கற்றுக் கொள்ள முடியும். தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டோம்.

  ஆனால் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். மிடில் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்களை விட அவர்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

  இது போன்ற தோல்வியால் வீரர்கள் தாழ்மை அடைவார்கள். தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக் கொண்டு இருந்தால் கடினமாக உழைக்க வேண்டிய பகுதிகள் தெரியாமல் போய் விடும். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எப்படி இருந்தாலும் நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும்.

  இவ்வாறு டோனி கூறினார்.  மும்பை அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்சை அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

  இந்த வெற்றி மூலம் நாங்கள் இன்னும் வாய்ப்பில் இருப்பது மகிழ்ச்சியானதே. வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்த ஆட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வீரர்களிடம் தெரிவித்து இருந்தோம். பொல்லார்ட் சேர்க்கப்படவில்லை. இதை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் இப்போதும் மேட்ச் வின்னர் தான்.

  அனைத்து துறையிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதனால் நல்ல முடிவு கிடைத்தது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சென்னை சூப்பர்கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் டெல்லி அணியை நாளை (30-ந்தேதி) சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை 1-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2018 #CSKvMI #Dhoni