search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு, அலுவலக சுமையால் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
    X

    வீடு, அலுவலக சுமையால் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

    வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
    வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படி பணிக்கு செல்லும் தாய்மார்கள் மற்ற பெண்களை விட 40 சதவீதம் அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் இரண்டு குழந்தைகள் கொண்ட தாய்மார்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    அக்குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்கொள்ளும் சிரமங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடுகிறது. குழந்தை இல்லாமல் முழு நேரமாக வேலையில் ஈடுபடும் பெண்களை ஒப்பிடும்போது அவர்களை விட ஒரு குழந்தை கொண்ட தாய்மார்கள் 18 சதவீதம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

    மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் 6025 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் ரத்த அழுத்தம், ஹார்மோன் அளவுகள், உடல் உழைப்பு, பணி சார்ந்த வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மன அழுத்தம் அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பெண்களின் வயது, கல்வி, பார்க்கும் வேலை மற்றும் வருமானம், பணி நேரம், குடும்ப சூழ்நிலை போன்றவைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

    இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘குடும்பத்தில் நிலவும் மோதல் போக்கும், பணி நெருக்கடியும் மன அழுத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இரண்டையும் சுமுகமாக கையாள வேண்டும். பணி பற்றிய சிந்தனை மேலோங்கும்போது குடும்பத்தினருடன் முழு ஈடுபாட்டோடு நேரத்தை செலவிட முடியாது. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். எப்படியாவது எடுத்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற மன நிலையிலேயே இருப்பதும், பணியிலேயே நேரத்தை அதிகமாக செலவிடுவதும் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும். அது மன அழுத்தத்திற்கும் காரணமாகிவிடும்’’ என்கிறார்கள்.

    Next Story
    ×