search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே அஞ்சலக முதலீட்டு திட்டங்களை அறிவீர்களா?
    X

    பெண்களே அஞ்சலக முதலீட்டு திட்டங்களை அறிவீர்களா?

    கவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஞ்சலகம் மூலமும் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    கவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி...

    தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர்வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் அடக்கம். இவற்றுக்கு 4 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிவிலக்கும் உள்ளது.

    அஞ்சலகங்களில் ரொக்கப் பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பின் மூலம் வளர்ந்த வட்டி 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வரிவிதிக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன. இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.

    அஞ்சலகத் தொடர்வைப்புத் திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுக் காலமான 5 ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடைவெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 சதவீதம் அளிக்கப்படுகிறது. முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.



    அஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப்புத் தொகையுடன் கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ. 4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ. 9 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 சதவீதம்.

    அஞ்சலக நிலையான வைப்புக் கணக்குத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 200 உடன் கணக்கைத் தொடங்கலாம். காலாண்டுவாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 சதவீத வட்டியும், 2 மற்றும் 3 ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். 5 ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.

    பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம், சுகன்யா சம்ரிதி. இதில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 250 ரூபாய் செலுத்தலாம் என அரசு சமீபத்தில் அறிவித்தது. முன்பு இது ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு நிறைவடைந்தால் கணக்கைத் தொடங்கலாம். பெண்குழந்தையின் பெற்றோரோ, சட்டப் படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி. இரண்டு குழந்தை களாக இருந்தால் இரு வேறு கணக்கு களைத் தொடங்கலாம்.
    Next Story
    ×