search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு தேடி வரும் உணவு... லாபமா? நஷ்டமா?
    X

    வீடு தேடி வரும் உணவு... லாபமா? நஷ்டமா?

    தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    அந்த தகவல் தொழில் நுட்ப அடிமைத்தளத்தில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம் ஆகி விட்டது. மது, மாது ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு, தகவல் தொழில் நுட்பம் மனிதனுக்கு மிகப்பெரிய போதையாகி விட்டது.

    செம்மறி ஆடுகள்

    மந்தையாக செல்லும் செம்மறி ஆடுகளில், முன்னே செல்லும் ஒரு ஆடு கிணற்றில் விழுந்தாலும், அதனை பின்தொடரும் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுந்து விடும். அது போல தகவல்தொழில் நுட்பம் என்ற ஒற்றை பாதைக்கு பின்னால் ஒட்டுமொத்த சமூகமும் செம்மறி ஆடுகள் போல் சென்று கொண்டு இருக்கிறது.

    பேசுவதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட செல்போனில் எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பல சாதனங்கள் செய்து கொண்டு இருந்த வேலைகளை எல்லாம் செல்போன் ஒன்றே செய்கிறது. செல்போனிலே வீட்டுக்கு தேவைக்கான சாமான்களை வாங்க தொடங்கினோம். கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வரவழைக்கிறோம். தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இது வளர்ச்சிக்குள் இருக்கும் வீழ்ச்சி என்பதனை யாரும் அறிவதில்லை.



    சலுகை

    வீட்டுக்கு வந்து உணவு தரும் சேவையை பல நிறுவனங்கள் மக்களுக்கு அளித்து வருகிறது. இவர்களது செயலி மூலம் நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம். அவர்கள் அதனை நமது வீட்டுக்கு அரை மணி நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள். மேலும் இந்த நிறுவனங்கள் அளிக்கும் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளால் கவர்ந்திழுக்கப்படும் மக்கள் இதற்கு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    நேர விரயம்

    லாபம் இருக்கிறது என்று சொன்னவர்களின் கருத்துக்கள் வருமாறு:-

    நகர வாழ்க்கையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. நான்கு பேர் இருக்கும் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு செல்ல முடியாது. ஆட்டோவில் செல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் ஓட்டலுக்கு சென்று வர நேரம் விரயம் ஆகிறது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து விட்டால் போதும். சலுகை விலையில் வீட்டுக்கே வந்து உணவு தருகிறார்கள். விரும்பும் நேரத்தில், விரும்பும் உணவுகளை சாப்பிடலாம். இதை விட என்ன வேண்டும் என்று என்கிறார்கள்.

    எலிப்பொறி


    நஷ்டம் தான் என்று சொன்னவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் வெளியூர் பயணங்களின் போது தான் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது சுவைக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் ஓட்டலில் சென்று சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது. வீட்டு சாப்பாடு தான் உடலுக்கு ஆரோக்கியம். ஆனால் ஓட்டல் சாப்பாட்டை வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவது சரியாகுமா? அதில் சலுகை என்பதே எலிப்பொறியில் வைக்கும் தேங்காய் போன்றது. அதில் நாம் சிக்க தான் செய்வோம். நம்மை ஏமாற்றி வியாபாரம் செய்வதற்கான உத்தி அது. ஒரு முறை வீட்டிற்கு உணவுகளை வரவழைத்து சாப்பிட்டு விட்டால், அதற்கு அடிமையாகி மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் குடியேறி விடும் என்கிறார்கள். 
    Next Story
    ×