search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
    X

    தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

    தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம்.
    தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் உருவாகிறது? தற்கொலையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்ட மனநல டாக்டர் ராஜேஷ் கூறியதாவது:-

    எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. 2-வதாக கொலை செய்யப்படுவதை விரும்புவது. 3-வதாக தன்னையே கொலை செய்து கொள்வது. ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர்.

    எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. சில பெரிய தலையீடுகள் தற்கொலையை பெருமளவு தடுத்துள்ளன. உதாரணமாக பூச்சிக்கொல்லிகள், விஷம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்க செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.



    தற்கொலை எண்ணம் கொண்டோருடன் பேசி அதனைத் தடுக்கக்கூடிய உதவித் தொலைபேசி எண்களை உருவாக்குதல், தற்கொலை சார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிதல், நேர மேலாண்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம். தற்கொலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், பொதுஇடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம். கூடுமானவரை தனிமையை தவிர்த்தல் நல்லது. தற்கொலை தடுப்புக் கொள்கைகள், திட்டங்களை அமல்படுத்தி, அத்துடன் பொதுமக்களின் பங்கேற்பை சேர்க்கும்போது, சிரமமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாம் என்று மக்கள் எண்ணுகிற போக்கை தலைகீழாக மாற்றலாம், தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×