search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு
    X

    சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு

    பெண்கள் சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம்.
    சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.

    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.

    பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ?”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.

    இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.

    சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.

    நமது  பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.

    சமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.

    சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ ? காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.

    குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம். 
    Next Story
    ×