search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

    பெண்களே அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
    இன்று மிக்ஸி இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிது. எனவே, எல்லோருக்குமே மிக்ஸியின் பயன்பாடு மற்றும் அதன் அம்சங்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

    மிக்ஸி வாங்கும்போது மேலோட்டமாக கவனிக்க வேண்டியது அதன் வாட்ஸ் (மின் உபயோகம்), ஆர்பிஎம், ஜார்களின் எண்ணிக்கை, உத்திரவாதம் மற்றும் விலை. தில் வாட்ஸ் எனும்போது 500 முதல் 750 வாட்ஸ் மின்சாரத்திறன் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. 1800-2000 ஆர்பிஎம் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாண்டுகள் உத்திரவாதம் உள்ளதாலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன பிளேட் கொண்டதும் ஆன மிக்ஸியை தேர்ந்தெடுப்பதும் நல்லது. பொதுவாக பெரிய ஜார்கள் இரண்டும், ஜீசர் ஜார் ஒன்றும், சிறிய ஜார் ஒன்றும் போதுமானது. ஜீசர் ஜார் உள்ள மிக்சியை வாங்கிவிட்டால் ஜீசர் தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பாதுகாப்பு அம்சங்கள்

    மிக்ஸி மின்சாரத்தில் இயங்குவது, மேலும் மிக கூர்மையான பிளேடுகள் கொண்டது என்பதால் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம். சேப்டி லாக் உள்ள மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. ஜாரின் மூடி லேசாக திறந்து கொண்டாலும் மிக்ஸி ஓடாமல் நின்று விடும் அம்சம் உள்ளது மிகவும் உபயோகமாக இருக்கும். கரண்டியையோ, கையையோ விட்டு ஜாரின் ஓரத்தை கிளறும்போது தவறுதலாக மிக்ஸி ஓட ஆரம்பித்தால் கைவிரல் வெட்டப்படும் அபாயம் இந்த அம்சத்தால் தவிர்க்கப்படுகிறது.

    ஓவர் லோட் பாதுகாப்பு

    மிக்ஸியில் இருக்கும் திறனைவிட அதிகமாக மிக்ஸி ஓடினால் மோட்டார் கெட்டுவிடும் அபாயத்தை இந்த பாதுகாப்பு அம்சம் தவிர்க்கிறது. அதிக நேரமோ, அதிக சிரமத்துடன் மிக்ஸி ஓடுவது தெரிந்தால் மிக்ஸி உடனடியாக தானாகவே நின்றுவிடும். மோட்டார் நன்கு ஆறியபின் மிக்ஸியின் கீழ்புறம் உள்ள பட்டனை அமுக்கினால் மட்டுமே மீண்டும் ஓட ஆரம்பிக்கும். இந்த அம்சம் மிகவும் அவசியமானது.

    மிக்ஸி ஓடும்போது அதிரும். அந்த அதிர்வினால் மிக்ஸி கீழே விழுந்து விடும் அபாயம் இருப்பதால், அதன் கால் பகுதியில் வாக்யூம் லாக் இருக்கும். இந்த லாக் மிக்ஸியை திரையுடன் சேர்த்து ஒட்டிவிடும். இந்த அம்சமும் மிக முக்கியமானதாகும். 
    Next Story
    ×